அதிவிரைவு ரயிலான புல்லட் ரயில் சேவையை இந்தியாவிலும் கொண்டு வருவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. முதல்கட்டமாக மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கப்பட இருக்கிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் அவை 90 சதவீதம் எளிதில் நிறைவடைந்து விடும் என ரயில்வே வாரியம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இங்கு புல்லட் ரயில் சேவை நிறைவடையும் பட்சத்தில் 508 கிலோமீட்டருக்கான பயணத்தூரத்தை இரண்டு மணி நேரத்தில் எளிதில் கடக்க இயலும்.

பணிகள் அனைத்தும் விரைந்து நடந்து முடிந்தால் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் சேவை அடுத்த 6 மாதத்தில் தொடங்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே 2023 ம் ஆண்டுக்குள்ளாக இந்தியா முழுவதும் புல்லட் ரயில் சேவையை கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்காக 6 வழித்தடங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை-பெங்களூரு-மைசூரு இடையிலான 435 கி.மீ வழித்தடம் தேர்வாகி இருக்கிறது. அங்கு புல்லட் ரயில் சேவை அளிப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.

இவற்றுடன் டெல்லி - நொய்டா - லக்னவ் - வாராணசி (865 கிமீ), டெல்லி - ஜெய்பூர் - உதய்பூர் - ஆமதாபாத் (886), மும்பை - நாசிக் - நாகபுரி (753), மும்பை - புனே - ஹைதராபாத் (711), டெல்லி - சண்டிகர் - லூதியானா - ஜலந்தர் - அமிர்தசரஸ் (459) ஆகிய வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஒப்புதல் அளித்திருக்கிறார். செயல்திட்ட வரைவுகள் இறுதி செய்யப்பட்டவுடன் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்திருக்கிறார்.

Also Read: கஞ்சாவுக்கு அடிமையான கடைசி மகன்..! ஆத்திரத்தின் உச்சியில் கொடூரமாக கொன்ற தாய்..!