சென்னை  போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர் ஒருவர், நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டார். 

இது போலீசார் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் அட்லி கூட்டணியில் உருவான திகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்று வரும் நிலையில்.  சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது . அதனையடுத்து போலீசார் உடனடியாக நீலாங்கரை மற்றும் சாலிகிராமத்தில் இருக்கும் விஜய் வீடுகள் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது திருமண மண்டபம் உள்ளிட்ட  இடங்களும் சோதனையில் ஈடுபட்டனர். 

ஆனால் அங்கு வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.  எனவே அது வெறும் புரளி என்பது தெருந்துகொண்ட போலீசார்.  மிரட்டல் விடுத்த வாலிபரின் செல்போனை நெம்பரை  வைத்து இந்த இளைஞரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதில் அந்த நபர் ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த அஜித்  ரசிகர் என்பது தெரியவந்தது.  பிகில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் இப்படி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.