அலறும் தலைநகர்.. மிரளும் பொதுமக்கள்.. பள்ளி, கோவில்களை தொடர்ந்து சென்னை MIT கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சென்னையிலுள்ள 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Bomb Threat At Chennai MIT College tvk

சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி 8-ம் தேதி சென்னையிலுள்ள 13 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் அனைத்து பள்ளிகளுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு நிபுணர்களின் தீவிர சோதனைக்குப் பிறகு அது புரளி என்பது தெரியவந்தது. 

இதையும் படிங்க: உலக அளவிலான போதைப் பொருட்கள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு! செயலிழந்த உளவுத்துறை! ராமதாஸ் விளாசல்!

அதேபோல், சென்னையில் உள்ள தலைமைச்செயலகம் மற்றும் நேற்று காலை சென்னையில் உள்ள கோயில்களில் வெடிகுண்டு வெடிக்கும் என பெங்களூரு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை பெருநகர காவல்துறையை தொடர்புகொண்டு பெங்களூரு போலீசார் தகவல் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று இரவு சென்னை குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரிக்கு இமெயில்  ஒன்று வந்துள்ளது. அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சார்பில் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க:  School Holiday: பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்.. நாளை விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

மேலும் மர்ம பார்சலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பிரபல எம்ஐடி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios