தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள பாஜகவிருக்கு அக் கட்சியின் சார்பில் பின்பற்றவேண்டிய  விதிமுறைகள் குறித்து அறிக்கை ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ,திமுக போன்ற கட்சிகளை பின்னுக்குத் தள்ளும் வகையில் தேர்தல் பணியில் பாஜக இப்போதே வேகம் காட்டத்தொடங்கியுள்ளதை இது காட்டுகிறது. 

 

உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது .  வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதற்கு முன்னர் பலமுறை இப்படி அறிவிக்கப்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த முறை அரசு அறிவித்துள்ளபடி நிச்சயம் உள்ளாட்சித்தேர்தல்  நடத்தப்படுமா அல்லது வழங்கம்போல தள்ளிப்போகுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  ஆனால் இந்நிலையில் தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கை உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடக்கப்போவது உண்மைதான் என்பதை உறுதி செய்துள்ளது.  அதாவது தமிழக பாஜகவின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது அதன் விவரம். 

வருகின்ற தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர உறுப்பினர்கள் கவனத்திற்கு....அனைவருக்கும் வணக்கம், அடுத்த வாரம் மாவட்ட வாரியாக "தேர்வுக் குழு" அறிவிக்க உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் "தேர்வு குழுவிடம்" நீங்கள் போட்டியிட விரும்பும் இடத்தின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும்  பதவியின் விவரத்தை கூற வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழுள்ள விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும், விண்ணப்பிக்கும் நபர் தீவிர உறுப்பினர்களாக இருக்க வேண்டும்  விண்ணப்பிக்கும் நபர் மண்டல், தேர்வு பெற்று இருக்க வேண்டும் இப்படிக்கு, கேசவ விநாயகம் - மாநில பொதுச் செயலாளர் (அமைப்பு) பாஜக தமிழ்நாடு என குறிப்பிடப் பட்டுள்ளது.