Asianet News TamilAsianet News Tamil

நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்பு பணத்தை வசூலித்த பாஜக.. திருமாவளவன்!

தேர்தல் பத்திரத்தில் பாஜக தான் முண்ணனியில் இருக்கிறது. ஒட்டுமொத்த வசூலில் 47 சதவீத நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்பு பணத்தை எல்லாம் வசூலித்து வைத்து இருப்பது பாஜக தான். 

BJP collects black money by blackmailing corporates in the name of donation... thirumavalavan tvk
Author
First Published Mar 17, 2024, 11:51 AM IST

கருப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரம் தான் தீர்வு என்ற நேர்மையற்ற அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை  விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: கடந்த முறை மார்ச் 10ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் ஆணையத்தின் பல்வேறு குளறுபடிகள் 2 தேர்தல் ஆணையர் பதவிகள் காலியாக இருந்தால் ஒரு வார கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முதற்கட்டமாக தமிழ்நாட்டை இணைத்து உள்ளனர். வேட்பு மனுவை தாக்கல் செய்ய முன்றே நாட்கள் இடைவெளி உள்ளன. இன்னும் பாஜக, அதிமுக கூட்டணி அமைக்கவில்லை. ஒரு வார இடைவெளி கூட தராமல் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளார்கள். மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேச போன்ற மாநிலங்களில் 2 முதல் 7 கட்ட தேர்தலை நடத்துகின்றனர். 

இதையும் படிங்க: கல்வியைக் காவிமயமாக்க முதல்வர் ஸ்டாலின் எப்படி துணைபோகிறார்? இதுதான் பாசிச எதிர்ப்பா? சீமான் ஆவேசம்!

தமிழகத்தில் ஒரே கட்ட வாக்குபதிவு. இதில் அரசியல் தலையீடு இருக்க தான் செய்கிறது. தமிழ்நாட்டை குறி வைத்து தான் தேர்தல் ஆணையத்தை அறிவிப்பே சான்றாக உள்ளது. எதிர்கட்சிகள் விடுத்த பொதுமக்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டா மதிக்கவில்லை. ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கோரிக்கை வைத்தது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த விளக்கத்தையும் தரவில்லை. முதற்கட்ட வாக்குபதிவுக்கும் 7ம் கட்ட வாக்குபதிவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாள் இடைவெளியே தர வேண்டும். 3 கட்டமாக தேர்தல் நடத்த முடியும். இந்தியா முழுவதும் ஒரே நாளில் சட்டமன்றம், பாராளுமன்றம் 2 தேர்தல்களையும் நடத்திய வரலாறு உண்டு. 

வாக்குசீட்டு இருக்கும் போதே ஒரே நாளில் நடத்திய தேர்தல் ஆணையம் இ.வி.எம். கருவி கொண்ட இந்த காலத்தில் இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக ஏன் தேர்தல் நடத்த முடியாது. ஏன் 7 கட்ட தேர்தல். 45 நாள் இடைவெளி ஏன் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். ஒரு வட மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்துவது இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. 

தலைமை தேர்தல் ஆணையர் உள்பட ஆணையர்கள் சங்பரிவார் அரசுக்கு கட்டுபாட்டிற்கு செயல்படுகிறார்கள். இதனால் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை. நம்பகத்தன்மை இல்லை. மக்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். மக்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கு வர வேண்டும். நாட்டை பாதுகாக்க சந்திக்க கூடிய தேர்தல். வாக்காளர்கள் தான் நாட்டை காப்பாற்றி ஆக வேண்டும். தேர்தல் ஆணையத்தை நம்பி களம் இறங்கவில்லை. மக்களை நம்பி இறங்குகிறோம். 

இதையும் படிங்க: ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ்.. விட்டதை பிடிக்க இபிஎஸ்க்கு விடாமல் குடைச்சல்..!

தேர்தல் பத்திரத்தில் பாஜக தான் முண்ணனியில் இருக்கிறது. ஒட்டுமொத்த வசூலில் 47 சதவீத நன்கொடை என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டி கருப்பு பணத்தை எல்லாம் வசூலித்து வைத்து இருப்பது பாஜக தான். தேர்தல் பத்திரங்கள் முலம் ரூ. 6 ஆயிரம் கோடி. தேர்தல் பத்திரம் இல்லாமல் கருப்பு பணம் எத்தனை ஆயிரம் கோடியாக இருக்கும் என்று யூகிக்க முடிகிறது. தேர்தல் பத்திரங்களில் அதானி, அம்பானி நிறுவனம் ஏன் இடம் பெறவில்லை. தேர்தல் நிதி தர கூடிய வகையில் லாபத்துடன் இயங்கவில்லை. இது எல்லாம் பாஜகவின் சூதாட்டம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். எந்த கம்பேனி யாருக்கு எவ்வளவு தந்து உள்ளது என்பது தெரிந்துவிடும். அப்போது பாஜகவின் முகத்திரை கிழிந்து விடும். கருப்பு பணத்தை ஒழிக்க தேர்தல் பத்திரம் தான் தீர்வு என்ற நேர்மையற்ற அரசியல் வேறு எதுவும் இருக்க முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios