சென்னையில் அதிர்ச்சி.. பிரியாணி சாப்பிட்ட தகராறில் இளைஞர் தற்கொலை..!

பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும், அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட பின் பணத்திற்கு பதில் செல்போனை கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது. 

biryani eating dispute.. Youth commits suicide in chennai

சென்னையில் பிரியாணி சாப்பிட்ட தகராறில் போலீஸ் விசாரணைக்கு பிறகு வீடு திரும்பிய இளைஞர் ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ராஜாமுத்தையாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ - சங்கரியின் தம்பதியின் மகன் ஹரிஷ் (24). இவர் நேற்று முன்தினம் இரவு ராஜா அண்ணாமலைபுரம் காமராஜர் சாலையில் உள்ள பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்ததும், அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சாப்பிட்ட பின் பணத்திற்கு பதில் செல்போனை கொடுத்ததால் தகராறு ஏற்பட்டது. 

biryani eating dispute.. Youth commits suicide in chennai

இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிஷை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றதாக தெரிகிறது. பின்னர் விசாரணை முடிந்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிற்கு வந்ததுமே சிறிது நேரத்தில் ஹரிஷ் விஷம் குடித்துள்ளார். 

biryani eating dispute.. Youth commits suicide in chennai

பின்னர், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகனை விசாரணைக்கு அழைத்து, போலீசார் துன்புறுத்தியதாகவும், அதனால்தான் ஹரிஷ் மனஉளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios