ஹாலிவுட் படத்தை மிஞ்சிய விபத்து.. சென்டர் மீடியனில் மோதிய பைக்.. தூக்கி வீசப்பட்ட மாணவர்.. எதிர்திசையில் பலி

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர் சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு எதிர் திசை சாலையில் வந்துகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

bike accident...college student death in chengalpattu

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற கல்லூரி மாணவர் சாலை நடுவே உள்ள தடுப்பின் மீது மோதி தூக்கி வீசப்பட்டு எதிர் திசை சாலையில் வந்துகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

பைக்கில் அதிவேகம்

விழுப்புரம்  மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் மகனான குரு சுபராஜபதி. வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூருக்கு தனது பல்சர் பைக்கில் தலைக்கவசம் அணியாமல் அதிகவேகமாக சென்றுக்கொண்டிருந்தார். 

விபத்தில் கல்லூரி மாணவன் பலி

அப்போது மாத்தூர் என்ற இடத்தின் அருகே வளைவு ஒன்றில் வேகத்தை குறைக்காமல் குரு சுபராஜபதி  சென்றார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் தாறுமாறாக ஓடி சாலை நடுவே இருந்த காங்ககிரீட் தடுப்பு கட்டையில் மோதி எதிர்ப்பக்கம் தூக்கி வீசப்பட்டார். அப்போது, எதிர்திசையில் சென்ற சரக்கு வாகனம் ஒன்றின் மீது தலை மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  குரு சுபராஜபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios