கனமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.. சென்னை மாநகராட்சி எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், 8ம் தேதி 10ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

Be prepared to face heavy rain.. Chennai Corporation Advisory

சென்னையில் டிசம்பர் 8ம் தேதி முதல் 10ம் வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மண்டல அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் இருந்து 770 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று மாலை புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால், 8ம் தேதி 10ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதையும் படிங்க;- இன்று உருவாகிறது புயல்..! வட மாவட்டங்களில் வெளுத்துக்கட்டப்போகும் மழை..! இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

* கடந்த மழையின்போது அதிக நீர் தேங்கிய இடங்களில் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* நாளை முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

* மீட்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில் 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

* மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

* அனைத்து வார்டுகளிலும் மீட்பு பணியில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உதவும் வகையில் 10 தற்காலிக தொழிலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

* அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும். போதுமான மருந்துகள் கையிருப்பை மருத்துவக் குழுவினர் உறுதி செய்து கொள்ள வேண்டும். 

* வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும். மரங்கள் அகற்றப்படுவதை மண்டல அளவிலான அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

* மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

* மழைநீர் வடிகால்களில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதையும் படிங்க;- தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை.! எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக மழை.? வானிலை மையம் வெளியிட்ட புதிய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios