சிறு, குறு தொழில்களுக்கு வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது - அமைச்சர் பழிவேல் தகவல்
மைக்ரோ பொருளாதாரத்திலும், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் வங்கிகளின் பங்கு மிக முக்கியமானது என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள ஹெச்.எஸ்.பி.சி வங்கி கிளையில் தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில் 21வது ஆண்டாக உதவும் கரங்கள் நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டது. இதில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி அடுத்த ஒரு வாரத்திற்கு கோபாலபுரம் வங்கி கிளையில் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் உதவும் கரங்கள் நிகழ்ச்சிக்காக நலிந்த விற்பனையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், மனநலம் பாதித்தோர் இல்லங்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையங்களை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு கடைக்கும் சென்று பொருட்களை பார்வையிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தைகளை விரிவுப்படுத்தவதில் வங்களின் பங்கு மிக முக்கியமானது. இத்தகைய பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெரியளவில் கடன்கள் வங்கிகளில் இருந்து தான் பெறப்படுகிறது. சர்வதேச வங்கிகள் உலகளவிலான வழிகளை சந்தைகளில் அறிமுகப்படுத்துகிறது. இத்தகைய வங்கிகள் நுண்ணிய பொருளாதாரத்திற்கும், சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சி, குறிப்பாக இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தனியார் தொண்டு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு வங்கிகள் துணைபுரிகின்றன எனத் தெரிவித்தார்.