7-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி.. நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறிய தாய்
நேற்று மதியம் வனிதாவின் இரண்டரை வயது பெண்குழந்தை கவாஷ் வீட்டில் உள்ள ஷோபா மீது ஏறி ஜன்னலை திறந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை கவாஷ் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தது. உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சென்னை ஓட்டேரியில் 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் வசித்து வருபவர் வனிதா(35). இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த ஒரு வருடத்துக்கு முன் நடந்த சாலை விபத்தில் கணவர் விஜய்குமார் ஜெயின் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, வனிதா தனது இரண்டு குழந்தைகள் மற்றும் தம்பி தினேஷ்குமார், தாய் ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் வனிதாவின் இரண்டரை வயது பெண்குழந்தை கவாஷ் வீட்டில் உள்ள ஷோபா மீது ஏறி ஜன்னலை திறந்து விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை கவாஷ் 7-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தது. உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டது என்று தெரிவித்தனர். இதனால், குழந்தையின் உடலை பார்த்து தாய் கத்தி கதறினார்.
பின்னர் வினிதா இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.