சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). கல்லுாரி பேராசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை.திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை. இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமாக நன்கொடை வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் பர்வதம் காலமானார்.  

சென்னையைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை பர்வதம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்துக்கு எழுதி வைத்த 9.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அவரது சகோதரி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). கல்லுாரி பேராசிரியையாக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தை. இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமாக நன்கொடை வழங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் பர்வதம் காலமானார். 

பர்வதமுக்கு சென்னையில் திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு வீடுகள் இருக்கிறது. இவற்றின் தற்போதைய மதிப்பு 6 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் தன் இரு வீடுகள், நகைகள் மற்றும் வங்கியில் வைத்துள்ள பணம் ஆகியவற்றை தன் மறைவுக்குப் பிறகு திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க வேண்டும் உயில் எழுதி வைத்திருந்தார். மேலும், அந்த இடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி மருத்துவர் ரேவதி மற்றும் அவரது கணவர் விஸ்வநாதம் மற்றும் வி. கிருஷ்ணன் ஆகியோர் நேற்று திருமலைக்கு வந்தனர். பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டியிடம், குழந்தைகள் நல சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.3.2 கோடியை நன்கொடையாக வழங்கினர். மேலும், சென்னையில் உள்ள ரூ. 6 கோடி மதிப்புள்ள 2 வீட்டு பத்திரத்தையும் வழங்கினர். இவற்றின் மொத்த மதிப்பு 9.2 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.