அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், கலை - அறிவியல், பொறியியல், எம்.சி.ஏ. படிப்புகளுக்கான அரியர் மாணவர்களும் தேரச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்குப் பதிலளித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. அதில், அரியர் தேர்வு மாணவர் விவகாரத்தில் தமிழக அரசின் முடிவு யுஜிசி விதிகளுக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கல்லூரி இறுதிப்பருவ தேர்வை கண்டிப்பாக நடத்தவேண்டும். அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. இதனால், ஏஐசிடிஇயின் பதிலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.