Asianet News TamilAsianet News Tamil

உலக தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்.. முதல்முறையாக இடம்பெற்றது!!

2020 ம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.

anna university comes in world best university ranking
Author
Tamil Nadu, First Published Sep 12, 2019, 6:07 PM IST

வாஷிங்டனில் இருக்கும் டைம்ஸ் நிறுவனம், உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடும். அதன்படி தற்போது 2020 ம் ஆண்டிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

anna university comes in world best university ranking

அதில் இங்கிலாந்தில் செயல்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உலகளவில் தலைசிறந்த பல்கலைக்கழகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

முதல் 10 இடங்களிலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தவிர்த்து வேறு நாடுகள் இடம்பெறவில்லை. 7 இடங்களில் அமெரிக்க கல்வி நிறுவனங்களுக்கும், 3 இடங்களை இங்கிலாந்து உயர்கல்வி நிறுவனங்களும் பெற்றுள்ளன.

இந்தியாவில் இருக்கும் பெங்களூருவின் இந்திய அறிவியல் மையம் மற்றும் இந்தூர் ஐ.ஐ.டி ஆகியவை 300 - 400 இடங்களுக்குள் வந்துள்ளன. மும்பை, டெல்லி, கோரக்பூர் ஆகிய  ஐ.ஐ.டி நிறுவனங்கள் 400 முதல் 500 இடங்களுக்குள் வந்துள்ளன. சென்னை ஐ.ஐ.டி மற்றும் கோவை  அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் 600 முதல் 800 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

anna university comes in world best university ranking

இதனிடையே இந்த பட்டியலில் முதல்முறையாக சென்னை கிண்டியில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. அதே போல கோவை வேளாண் பல்கலைக்கழகம், திருச்சி என்.ஐ.டி, வேலூர் வி.ஐ.டி, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை பி.எஸ்.ஜி பல்கலைக்கழகம், சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவையும் இந்த பட்டியலில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளன.

மொத்தம் 92 நாடுகளில் இருந்து 1300 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்தியாவில் இருந்து 56 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய அளவில் சீனா முதலிடத்தை பிடித்திருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios