8 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா சாலை இரு வழிப்பாதையாக இன்று முதல் மாற்றப்பட்டுள்ளது. அப்பாடா ட்ராபிக்கில் இருந்து தப்பிச்சோம் என சென்னைவாசிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

ஒன்வேயாக மாற்றினாலும் மாற்றினார்கள் ட்ராபிக் தொல்லை தாங்கமுடியவில்லை...இந்த  மெட்ரோ பணி எப்பத்தா முடியுமோ என்று அண்ணா சாலைப் பக்கம் போகும்போதெல்லாம் ஆதங்கப்பட்டு வந்தவர்களுக்கு இன்பமான செய்தி,  இன்று முதல்  அண்ணாசாலை மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்பதுதான் அது. கடந்த 2011ம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா சாலையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன அதனைத்தொடர்ந்து அண்ணா சாலையில் எல்ஐசி மற்றும் ஸ்பென்சர் வழியாக அண்ணா மேம்பாலம் செல்லக்கூடிய வாகனங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு ஜிபி ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிக்கூண்டு மார்கமாக ஒய்ட்ஸ் ரோடு வழியாக 2 கிலோமீட்டர் சுற்றி மீண்டும் அண்ணாசாலைக்கு வாகனங்கள் செல்லுமாறு அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து ஒருவழி சாலையாக இருந்த அண்ணா சாலை இன்று காலை 8 மணி முதல் மீண்டும் இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது இரண்டு நாட்கள் சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருப்பின் நிரந்தரமாக இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகர போக்குவரத்துப்ப போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.....