வெட்ட வெளியில் பூங்காவை படுக்கை அறையாக மாற்றிய காதல் ஜோடிகள்... காமக்களியாட்டம் போடும் இளசுகள்..!
சென்னையில், உயரமான பூங்கா கோபுரமாக அழைக்கப்படுவது அண்ணா நகர் டவர் பூங்கா. இந்த பூங்கா டாக்டர் விஸ்வேஸ்வரர் டவர் பார்க் என்று அழைக்கப்படுகிறது. உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்கா மிகவும் பழையான மற்றும் பிரபலமான பூங்காவாக இன்றும் திகழ்ந்து வருகிறது. எப்போதும் பூங்காவில் காதலர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்வதால் பரபரப்பாக காணப்படும்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் காதல்ஜோடிகள் பட்டப்பகலில் எல்லை மீறுவதாக எழுந்த புகாரை அடுத்து தற்போது அண்ணா நகர் பூங்காவிலும் இதுபோல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சென்னையில், உயரமான பூங்கா கோபுரமாக அழைக்கப்படுவது அண்ணா நகர் டவர் பூங்கா. இந்த பூங்கா டாக்டர் விஸ்வேஸ்வரர் டவர் பார்க் என்று அழைக்கப்படுகிறது. உலக வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக இந்த பூங்கா கட்டப்பட்டது. இந்த பூங்கா மிகவும் பழையான மற்றும் பிரபலமான பூங்காவாக இன்றும் திகழ்ந்து வருகிறது. எப்போதும் பூங்காவில் காதலர்கள் முதல் முதியவர்கள் வரை வந்து செல்வதால் பரபரப்பாக காணப்படும்.
மேலும், இந்த டவரின் மேலே ஏறி சென்று, சென்னை நகரின் முழு அழகையும் கண்டு ரசிக்கலாம் என்பதால் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் இந்த பூங்காவிற்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இதற்கிடையே இங்கு ஒருசில காதல் ஜோடிகள் கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் கடந்த 2011ம் ஆண்டு டவர் மூடப்பட்டது. எனினும், இப்பூங்காவில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் காலை, மாலை வேளைகளில் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த டவர் பூங்காவுக்குள் இருக்கும் மரத்தடிகள், புதர் பகுதிகள், இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காதல் ஜோடிகள் நாள் முழுக்க அமர்ந்து முகம் சுளிக்கும் வகையில் அருவருப்பான முறையில் சில்மிஷங்களில் ஈடுபடுவதும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதும் தொடர்ந்து வருகிறது. இதனால் இங்கு நடைபயிற்சிக்கு வரும் பெண்கள், மற்றும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுளிக்க வைக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதேபோல், வண்டலூர் உயிரியல் பூங்காவில் சில்மிஷங்கள் நடைபெற்று வருகிறது.