சென்னை பெரு வெள்ளத்திலும் அசால்டாக செல்லும் மஹிந்திரா தார்.. ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட வீடியோ..
பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் ஆனந்த் மஹிந்திரா தனது X வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 5-ம் தேதி தெற்கு ஆந்திர கடற்கரையில் பாபட்லா அருகே கரையைக் கடந்தது. ஆனால் இந்த புயல் சென்னைக்கு அருகே நீண்ட நேரம் நிலை கொண்டிருந்ததால் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. 2015-ம் பெரு வெள்ளத்தின் போது பெய்த மழையை விட அதிக அளவு கனமழை கொட்டி தீர்த்தது..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 42 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத தொடர் கனழையால் சென்னையில் பல இடங்கள் நீரில் மூழ்கின. தற்போது பல இடங்களில் தண்ணீர் வடிந்துவிட்டாலும், தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவரும் ஆனந்த் மஹிந்திரா தனது X வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சென்னையில் வெள்ளம் சூழந்த சாலையில், இடுப்பளவு நீருக்கு மத்தியில் மஹிந்திரா தார் கார் பயணிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. எதிர்சாலையில் ஒரு லாரி தடுமாறி சென்று கொண்டிருந்த போது, மஹிந்திரா தார் அசால்டா சாலையில் செல்வதையும் பார்க்க முடிகிறது.
தனது பதிவில் “ சென்னையில் இருந்து ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ எனக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டது. அதில் நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினத்தை என்னால் பார்க்க முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிறுவனத்தின் மஹிந்திரா தார் காரை தான் அவர் நீர்நிலை உயிரினம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு பலரும் பதிலளித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் தனது பதிவில் “ இந்த ஜூன் மாதம் பஞ்சாபில் வெள்ளம் வந்தபோது இதே போன்ற படங்களைப் பார்த்தேன்.” என்று பதிவிட்டுள்ளார்
வல்லமை மிக்க அன்னையின் முன் நாம் ஒன்றுமில்லை என்பதை இயற்கை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது” என்று மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார். அதே போல் மற்றொரு பயனர் "இது ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் நடக்கும், குறிப்பாக டிசம்பர் முதல் வாரத்தில்" என்று பதிவிட்டுள்ளார்.