Asianet News TamilAsianet News Tamil

குறைக்கப்படுகிறதா டாஸ்மாக் நேரம் ?? நெட்டிசன்ஸ் விவாதம் .. குடிமகன்கள் குழப்பம் ..

தமிழகத்தில் டாஸ்மாக் நேரம் குறைக்கப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன . ஆனால் இது பற்றி அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

an unofficial statement says that tasmac timings in tamilnadu to be reduced
Author
Tamil Nadu, First Published Aug 22, 2019, 3:25 PM IST

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது துணைமுதல்வர் பன்னீர்செல்வம் அளித்த தகவலின்படி தமிழகத்தில் மொத்தம் 5198 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன . முதலில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவித்தார் .

an unofficial statement says that tasmac timings in tamilnadu to be reduced

மதுவிலக்கை படி படியாக எட்டும் நோக்கத்தில் 2016 இல் ஆறாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா முதலில் 500 கடைகள் அடைக்கப்படும் என்று அறிவித்தார் . அவரது மறைவுக்கு பிறகு முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமியும் 500 கடைகளை அடைத்து உத்தரவிட்டார் .

இந்த நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களாக சமுக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது . அதாவது டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இனி மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட இருப்பதாக ஒரு செய்தி சுற்றி வருகிறது . எனினும் இதுகுறித்து அரசின் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை .

an unofficial statement says that tasmac timings in tamilnadu to be reduced

மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில்  இருந்த மதுபான கடைகளை அடைக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் சில வருடங்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது . அப்போது தமிழகத்தில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன . ஆனால் அந்த கடைகள் அனைத்தும் இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

Follow Us:
Download App:
  • android
  • ios