விரைவில்  தமிழ் கற்றுக்கொண்டு அதில் பேசுவேன் என  சென்னையில் நடைபெற்ற  புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களின் கடந்த இரண்டு ஆண்டு சாதனைகளை ஆவணப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள "கவனித்தல், கற்றல், தலைமை ஏற்றல், " என்ற  தலைப்பிலான புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார் அந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தன்னால் தமிழில் பேச முடியவில்லை என்பதை எண்ணி வருந்துவதாகவும் , கூறிய அமித்ஷா அதற்காக  மன்னிப்பு கோரினார், விரைவில் தமிழைக்  கற்றுக்கொண்டு அதில் பேசுவேன்  எனறு தெரிவித்த அவர் தமிழ் கற்க வேண்டும் என்பது  தன் நீண்ட நாள் ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார்.  உள்துறை  அமைச்சர் என்ற முறையிலோ பாஜகவின் தேசியத் தலைவர் என்ற முறையிலோ இந் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய அவர் வெங்கையா நாயுடு அவர்களின் மாணவன் என்ற முறையில் தான் கலந்து கொண்டிருப்பதாக அமித்ஷா கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் அது இந்திய மக்களின் நீண்ட நாள் கனவு என்று குறிப்பிட்ட அவர் அக்கனவு தற்போது  மெய்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்திய நாட்டின் தவ புதல்வர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு நாட்டுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் என  அமித்ஷாகுறிப்பிட்டார் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து தன் தேசபக்தியின் காரணமாகவும் தன்  கடீன உழைப்பின் மூலமாகவும் நாட்டின் துணை குடியரசு தலைவர் பதவிவரை  வெங்கையா நாயுடு உயர்ந்துள்ளார் என அமித்ஷா புகழாரம் சூட்டினார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.