4 ஆயிரம் கோடி எங்கே? வெள்ள பாதிப்புகளை டிவியில் பார்க்கக்கூடாதா? திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிசாமி!
சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணுக்கு அடியில் மின்வயர்கள் செல்லும் நிலையில் ஏன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தென்மேற்கு வங்கக் கடல்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம் புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வட தமிழக கரையை சுமார் 250 கி. மீ. தொலைவில் நெருங்கியபோது, சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகியவற்றில் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. புயல் மேலும் நெருங்கிய நிலையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. காலையில் காற்றின் வேகம் அதிகரித்ததுடன், மழையின் தீவிரமும் அதிகரித்து அதி கனமழையாக கொட்டியது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அத்தியாவசிய உதவிகள் கூட பெறமுடியாமல் மக்கள் திணறிவருகின்றனர். அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா
சென்னை பெருங்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதனையடுத்து, மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக செய்யப்பட்டன. அதிமுக ஆட்சிக்காலத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மக்கள் இன்னல்களை சந்திக்கின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகளை முன்கூட்டியே நியமிக்கவில்லை. மழை, வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மழைநீரில் தத்தளிக்கிறது. தமிழக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை. திட்டமிட்டு செயல்படாததால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். மழைநீர் வடிகால் பணிகளை உரிய நேரத்தில் முடிக்கவில்லை. வடிகால் பணிக்காக 4 ஆயிரம் கோடி ரூபாயும் அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சென்னை வெள்ள பாதிப்புகளை தொலைக்காட்சியில் மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காகவே உள்நோக்கத்தோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மண்ணுக்கு அடியில் மின்வயர்கள் செல்லும் நிலையில் ஏன் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தும், திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவில்லை.
சென்னையில் தேங்கிய மழைநீரை எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றும். செயற்கை வெள்ளம், இயற்கை வெள்ளம் என திசை திருப்பும் முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் வழங்கலாம். ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறும் திமுக அரசு, மழைநீர் வடிகால் பணிகளை எங்கும் மேற்கொள்ளவில்லை” என்று குற்றஞ்சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.