அதிமுகவின் குற்றவியல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் உடல்நலக்குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நாள்பட்ட நுரையீரல் பிரச்சனை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த துரைப்பாண்டியன், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, நள்ளிரவு 2 மணியளவில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆனால், அவருக்கு கொரோனா தொற்றோ அல்லது வேறு காரணங்களோ இல்லை என கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த துரைப்பாண்டியன் அதிமுக வழக்கறிஞர் மற்றும் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வந்தார். மேலும் மௌனம் பேசியதே, ரன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.