Asianet News TamilAsianet News Tamil

அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி; சாதித்த சென்னை ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு இஸ்ரோ வாழ்த்து!

அக்னிபான் ராக்கெட் நாட்டிலேயே முதல் செமி-கிரையோஜெனிக் (Semi-Cryogenic) என்ஜின் கொண்ட ராக்கெட் ஆகும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் 3D பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர் சத்ய ஆர் சக்ரவர்த்தி அக்னிகுல் நிறுவனத்தின் வழிகாட்டியாக செயல்பட்டிருக்கிறார்.

Agnikul successfully launches SOrTeD, achieves many firsts, ISRO Congratulates sgb
Author
First Published May 30, 2024, 5:28 PM IST | Last Updated May 30, 2024, 5:29 PM IST

சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் சோதனை வெற்றிகரமாக நிறைவேறி இருக்கிறது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தனியார் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7:15 மணிக்கு 'அக்னிபான்' ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் காஸ்கோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி சோதனை செய்திருக்கிறது. 300 கிலோவுக்குக் குறைவான எடையுள்ள செயற்கைக் கோள்களை ஏந்திச் செல்லக்கூடிய அக்னிபான் ராக்கெட் பூமியில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மேற்பார்வையிட்டார். இதற்கு முன் நான்கு முறை இந்த சோதனையை நடத்த திட்டமிட்டபட்ட பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

ராதிகாவுடன் ‘க்ரூஸ் டிரிப்’ செல்லும் ஆனந்த் அம்பானி! கண்டிஷன் போட்டு விருந்தினர்களுக்கு அழைப்பு!

அக்னிபான் ராக்கெட் நாட்டிலேயே முதல் செமி-கிரையோஜெனிக் (Semi-Cryogenic) என்ஜின் கொண்ட ராக்கெட் ஆகும். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட் 3D பிரிண்டிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி பேராசிரியர் சத்ய ஆர் சக்ரவர்த்தி அக்னிகுல் நிறுவனத்தின் வழிகாட்டியாக செயல்பட்டிருக்கிறார்.

வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய விமான எரிபொருள், மண்ணெண்ணெய் மற்றும் மருத்துவ தர திரவ ஆக்ஸிஜன் ஆகியவை இந்த ராக்கெட்டில் பயன்படுத்துகிறது என அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மொயின் எஸ்பிஎம் சொல்கிறார்.

இஸ்ரோ இதுவரை செமி கிரையோஜெனிக் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதில்லை. இப்போதுதான் இஸ்ரோ 2000 kN த்ரஸ்ட் செமி கிரையோஜெனிக் எஞ்சினை தயாரித்து வருகிறது. அதன் முதல் சோதனை மே 2ஆம் தேதி நடத்தப்பட்டது.

Entire Political Science மாணவர் மட்டும்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிஞ்சுக்கணும்: ராகுல் காந்தி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios