யார் மீது அதீத நம்பிக்கை வைக்கிறோமோ அவர் எதிராளிக்கு துணை புரிவதால் நம்பிக்கை வைத்தவர் ஏமாளியாகி விடுவார். அப்படி ஒரு உள்குத்தல்தான் இப்போது உள்ளாட்சி அமைப்பில் நடைபெற்று வருகிறது எனப்புலம்புகிறார்கள் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சிலர். 

இதுகுறித்து உள்ளாட்சி அமைப்பில் உள்ள ஒருவர், ‘’சென்னையில் உள்ளாட்சி அமைப்பு அலுவலகத்தில் நர்தனம் புரியும் அதிகாரி அவர். அவரது மைத்துனர் திமுக ௯ட்டணியில் இருக்கும் விவசாய கட்சி தலைவர் பொன்குமார். மாநகராட்சி அலுவலகத்தில் அணு அசைந்தாலும் நந்தாவின் கழகுப் பார்வைக்கு தப்ப முடியாது.  உள்ளாட்சித்துறை அமைச்சரும் இவர் மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.

 

ஆனால் அந்த நம்பிக்கையை தவிடுபொடியாக்கி வருகிறார் அந்த அதிகாரி.  துறை ரகசியங்களை துள்ளியமாக அறிந்த்து வைத்துள்ள அவர், தனது மைத்துனர் மூலமாக திமுக தலைமைக்கு அனுப்பி விடுகிறார். ஆட்சி மாற்றம் நடந்தால் அப்ரூரராக மாறி அமைச்சரை சிக்கவைக்க அத்தனை ஆதாரத்தையும் எடுத்து வைத்துள்ளார். 

அதுமட்டுமல்ல... இப்படி சேகரித்து வைத்துள்ள சில ஃபைல்களை புலனாய்வு வார இதழுக்கு கொடுத்ததே இவர் தான். அதனால் அந்த கோவை பத்திரிக்கையாளர் சிறை சென்ற சம்பவமும் நடந்தது. இதனால், அமைச்சரை பழிவாங்கத்துடித்துக் கொண்டிருக்கிறார் அந்த பத்திரிக்கையாளர்.  அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியவில்லை. அந்த அதிகாரியை கண்காணித்தால் அமைச்சருக்கு நல்லது.  இல்லையேல் துரோகம் வென்று விடும்’’என்கிறார்கள்.