தமிழக அரசு பாடப்புத்தக விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ள போதும், ஜூன் 21ம் வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு பாடப்புத்தக விநியோகம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பாடப்புத்தகங்களும் அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன என்றும், 6 கோடி இலவச பாடப்புத்தங்கள் அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் படி மாவட்ட முதன்மை கல்வி அலுவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நாளை முதல் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியை சேர்ந்த பிற பணியாளர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என கூறப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர் சேர்கை பணிகள், மதிப்பெண்கள் வழங்குதல் மற்றும் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகித்தல் போன்ற பல்வேறு பணிகள் நாளை முதல் தொடங்கும் என்றும் அந்த சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரானா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெற்றொர்கள் சங்கம் கலன்ந்த்தாய்வின் படி இம்மாதம் முதல்+1 மாணவர்கள் சேர்கை போன்ற காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
