Asianet News TamilAsianet News Tamil

திடீரென ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்… ஆலோசித்த விஷயம் என்ன?

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய், அலோசனை மேற்கொண்டதோடு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். 

actor Vijay suddenly met his fans
Author
First Published Nov 20, 2022, 8:57 PM IST

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய், அலோசனை மேற்கொண்டதோடு மேற்கொள்ள வேண்டியவை குறித்தும் அறிவுறுத்தியுள்ளார். 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இது தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திராவிலும் வெளியாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் இந்தப் படம் பொங்கலன்று ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் திடீரென நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை வகித்தார்.

இதையும் படிங்க: கோவில் கட்டிக்கொடுத்த தளபதி! குழந்தைகளுக்கு விஜய் பட பெயர்களை வைக்கும் மக்கள்- தமிழகத்தில் இப்படி ஒரு கிராமமா?

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரசிகர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தில் ஒரு பங்கை மட்டுமே செலவிடுங்கள், தேவையில்லாம் செலவு செய்ய வேண்டாம், முதலில் குடும்பத்தினரை நல்ல படியாக பார்த்துக் கொள்ளுங்கள், நற்பணிகளை மேற்கொள்ளும் போது ஏழை எளிய மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும், ஏழை எளிய குடும்பங்களுக்கு தொடர்ந்து உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பின்னர் பேசிய விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் 15 மற்றும் 16 இடங்களில் தான் விஜய் மக்கள் இயக்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரத்தம் கொடை கொடுக்கக் கூடிய இயக்கம் மக்கள் இயக்கம் தான்.

இதையும் படிங்க: வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை யாருக்கு? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என ஒரு நாளைக்கு 40லிருந்து 50 க்கு மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் கொடுத்து வருகிறார்கள். அதேபோல் ஏழைகளுக்கு உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். மேலும் மாவட்டத் தலைவர்கள் அனைவரும், நிர்வாகிகளுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தளபதியுடன் ஒரு முறை போட்டோ எடுத்துக்கொண்டு 47 முறை போட்டோ எடுத்துக் கொண்டதாக சிலர் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். மக்கள் இயக்கத்திற்காக உழைக்க கூடிய எந்தவொரு ரசிகனுடனோ,  தொண்டனுடனோ மட்டும்தான் தளபதி விஜய் போட்டோ எடுத்துக் கொள்வார். நடிகர் விஐய்க்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தற்போது, நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது போல் பிற மாவட்ட நிர்வாகிகளுடன் இதே போல் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios