சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊடரங்கை கடுமையாக பின்பற்றபட வேண்டும் என சென்னை மாநகர போலீசுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கும் மேலாக  பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பணக்காரர் ஏழை என்ற தயவு
தாட்சண்யமின்றி  பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும், நாளுக்கு நாள் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 20,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5-வது  இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நேற்று சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஊரடங்கை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியே சுற்றி திரிவதால் கொரோனா தீவிரமாக பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக ராமதாஸ் டுவிட்டரில் பதிவிலும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தடையை மீறி வெளியே சுற்றினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.