பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க அனுமதி.. நீதிமன்றம் பிறப்பித்த அதிர்ச்சி உத்தரவு.!
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதில் கருவுற்றார். அவரது கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், மருத்துவர்கள் குழுவை அமைத்து, பாலியல் வன்கொடுமையால் கருவுற்ற 13 வயது சிறுமியின் கருவை கலைக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க;- ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு..!
அதன்பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் சிறுமி வயிற்றில் கரு உருவாகி 28 வாரங்கள் மூன்று நாள் ஆகியுள்ளது. சிறுமி 139 செ.மீ., உயரமும், 36 கிலோ எடையுடன் உள்ளார். எனவே, கரு வளர்ச்சியை தொடர்வதோ, கலைப்பதோ சிறுமிக்கு ஆபத்தானது என அறிக்கையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிமன்றம் மருத்துவர்கள் சிலரின் கருத்தை கேட்டபோது, தற்போதைய நிலையில் கருவை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, மன ரீதியாக பலவீனமானவர். இவ்வளவு இளம் வயதில் குழந்தையை பெற்றெடுப்பது சரியானது அல்ல என்றனர்.
இதையும் படிங்க;- உயிரிழந்த மகனை கட்டித்தழுவி அழுது.. அதே இடத்தில் மாரடைப்பால் துடிதுடித்து இறந்த தாய்.. செங்கல்பட்டில் சோகம்.!
உச்ச நீதிமன்றம், பல்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் மனம், உடல் நலம், மருத்துவர்களின் பரிந்துரையை கருத்தில் வைத்து, 20 வாரங்களை கடந்த கருவையும் கலைக்க அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கரு வளர்ச்சி, 28 வாரங்கள் மூன்று நாட்கள். மனுதாரர் குடும்ப சூழல், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்காலம் மற்றும் மருத்துவர்களின் பரிந்துரை அடிப்படையில், மனுதாரர் மனு அனுமதிக்கப்படுகிறது. தமிழக அரசு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, சிறுமியின் கருவை இன்று அகற்ற வேண்டும். அகற்றிய கருவை, வழக்கு விசாரணைக்காக, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை, வரும் 22ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். கூறப்பட்டுள்ளது.