Asianet News TamilAsianet News Tamil

’இனி அவர் இந்தியாவின் மகன்...’ விமானத்தில் அபிநந்தன் பெற்றோர்களுக்கு உற்சாக வரவேற்பு... !

டெல்லிக்குப் புறப்பட்டு சென்ற விமானத்தில் உற்சாக வரவேற்பை கண்டு அபினந்தன்  பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். விமானத்தில் அவர்களுக்கு சக பயணிகள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். பலர் அவர்களை புகைப்படம் எடுத்தனர். தைரியமான, நாட்டுப்பற்று உள்ள மகனை பெற்றுள்ளீர்கள்'' என மனதார வாழ்த்தினர்.

abhinandan parents get standing welcome
Author
Tamil Nadu, First Published Mar 1, 2019, 12:12 PM IST

டெல்லிக்குப் புறப்பட்ட அபினந்தன் பெற்றோர்களுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பை கண்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்தனர். விமானத்தில் அவர்களுக்கு சக பயணிகள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். பலர் அவர்களை புகைப்படம் எடுத்தனர். தைரியமான, நாட்டுப்பற்று உள்ள மகனை பெற்றுள்ளீர்கள்'' என மனதார வாழ்த்தினர். 

இந்தியா மீது தாக்குதல் நடத்த வந்த பாகிஸ்தான் எப்-16 போர் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்திய இந்திய விமானி அபிநந்தன், அவரது விமானம் விழுந்து நொறுங்கியதால் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். தன்னிடம் விசாரணை நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய என்ற கர்வத்துடன் உயிருக்கு அஞ்சாமல் துணிச்சலான பதிலை அளித்தார். இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 abhinandan parents get standing welcome

இந்நிலையில் அபிநந்தனை விடுப்பதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்தார். இவரது இந்த அதிரடி அறிவிப்பு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து அபிநந்தன் பாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ முகாமுக்கு அழைத்து சென்று அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அபிநந்தன் முழு ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்த பின் தற்போது பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் வாகா எல்லைக்கு பிற்பகல் 2 மணிக்கு வர உள்ளார்.

 abhinandan parents get standing welcome

இந்நிலையில் அபி விடுதலை செய்யப்படுவதையொட்டி, அவரை வரவேற்க அவரது தந்தை ஏர்மார்ஷல் எஸ்.வர்த்தமான், தாயார் ஷோபா ஆகியோர் நேற்று இரவு சென்னை - டெல்லி விமானத்தில் புறப்பட்டனர். விமானத்தில் அவர்களுக்கு சக பயணிகள் எழுந்து நின்று கைத்தட்டி உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். பலர் அவர்களை புகைப்படம் எடுத்தனர். அபினந்தனின் வீரத்துக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றது. மேலும் தைரியமான, நாட்டுப்பற்று உள்ள மகனை பெற்றுள்ளீர்கள்'' என மனதார வாழ்த்தினர். abhinandan parents get standing welcome

டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் நள்ளிரவு தரை இறங்கியது. உடனே அபியின் பெற்றோர் வாகா எல்லை செல்வதற்காக அமிர்தசரஸ் புறப்பட்டு சென்றனர். வாகா எல்லையில் விமானி அபிநந்தனை வரவேற்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.  திருவிழா கூட்டம் போல வாகா எல்லையில் மக்கள் அலைமோதி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios