மக்களின் பிரார்த்தனையால் அபிநந்தன் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார் என அவரது தந்தை வர்தமான் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் தங்கள் வசம் இருக்கும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது. 
 
ஜெனிவா ஒப்பந்தத்தின்படி அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா அனைத்து நாடுகளும் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில், போர் பதற்றத்தை தவிர்க்கும் வகையில் இந்திய விமானி அபினந்தன் நாளை விடுவிப்பதாகவும், அவர் வாகா எல்லையில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்திய விமானி அபினந்தன் விடுவிக்கப்பட உள்ளார் என்பதை அறிந்த அவரது தந்தை வர்தமான், அனைவரது பிரார்த்தனையால் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’அபிநந்தன் விடுதலை செய்யப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். கடவுளின் ஆசியுடன் அபினந்தன் விடுதலை செய்யப்பட உள்ளார். அவரை நினைத்துப் பெருமிதப்படுகிறோம்’’  என அவர் தெரிவித்துள்ளார்