கடந்த 17 ம் தேதி தமிழக அரசு பால் விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது . பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் உற்பத்தி விலையை உயர்த்தியதோடு மட்டுமில்லாமல்  பால் விற்பனை விலையையும் அதிகரித்துள்ளது .

பசும்பால் விலை 28 ரூபாயில் இருந்து  32 ரூபாயாகவும்   , எருமை பால் விலை  35  ரூபாயில் இருந்து 41 ரூபாயாகவும்   உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி அளிக்கப்படவுள்ளது . அதே போல பால் விற்பனை விலையை 6  ரூபாய் உயர்த்தியுள்ளனர் . 

ஆவினில் நிலம் , ஆரஞ்சு , பச்சை என மூன்று வண்ணங்களில் பாக்கெட் பால் கொடுக்கப்படும் . அதன் படி  நீல நிற பாக்கெட்  அரைலிட்டர் 20 ரூபாயும் , ஒரு லிட்டர்  40 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது .

பச்சை நிற பாக்கெட் கால் லிட்டர்  11 ரூபாயும் , அரை  லிட்டர் 22.50  ரூபாயும் , ஒரு லிட்டர் 45 ரூபாயும் அதிகரித்துள்ளது .

ஆரஞ்சு பாக்கெட் அரை லிட்டர் 24.40 ரூபாயும் , ஒரு லிட்டர் 49 ரூபாயும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளது . 

கடைசியாக கடந்த 2014 ம் ஆண்டு பால் விலை உயர்த்தப்பட்டது .