சென்னையில் ரம்ஜான் தொழுகையின் போது வாக்குவாதம்; கீழே தள்ளி விட்டதில் மசூதியிலேயே உயிரிழப்பு
குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மசூதிக்கு உள்ளேயே கீழே தள்ளி விடப்பட்டு முகமது ரியாஸ் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் பெரிய மசூதியில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த சில நபர்கள் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளனர். இதனை மசூதியின் உறுப்பினரான முகமது ரியாஸ் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் தொழுகையை முடித்து வெளியே வந்ததும் பணம் கேளுங்கள் என கூறியுள்ளார்.
இதனை கண்ட மசூதியின் விழா கமிட்டி செயலாளர் பாஷா என்கிற அதிகூர் ரகுமான் ரியாஸை தட்டி கேட்டுள்ளார். அப்போது முகமது ரியாசுக்கும், பாட்ஷாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ரியாசை பாஷா கீழே தள்ளி உள்ளார். இதனால் நெற்றி மற்றும் கண் அருகே காயம் ஏற்பட்டு ரியாஸ் மயக்க நிலை அடைந்துள்ளார். இது குறித்து ரியாஸ் மகனிடம் தொலைபேசியில் தகவல் கொடுத்துள்ளனர்.
தூங்கிக் கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அப்பொழுது மகனிடம் முகமது ரியாஸ் என்னை அடித்து விட்டார்கள் உடனடியாக வா என்று அழைத்துள்ளார். மயக்கம் அடைந்த நிலையில் இருந்த ரியாசை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பிரேத பரிசோதனைக்காக முகமது ரியாஸின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அசுர வேகத்தில் மோதி பெண்ணை அந்தரத்தில் பறக்கவிட்ட கார்; தூய்மை பணியாளர் பலி
உயிரிழந்த முகமது ரியாஸ் இருதய நோயாளி என்றும் அவருக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் காவல் துறையினர் மற்றும் தாம்பரம் காவல் உயர் அதிகாரி, துணை ஆணையாளர் ஜோஸ்தங்ககையா, உதவி ஆணையாளர் முருகேசன், சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடேஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.