தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சீராக அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பாதிப்பு கொஞ்சம் கூட கட்டுக்குள் வரவில்லை. இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 938 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 21,184ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு தொற்று உறுதியானதால், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13980ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் தினம் தினம் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டுவது அச்சுறுத்தலாக உள்ளது. அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று ஒரே நாளில் 687 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

பாதிப்பு ஒருபுறம் அதிகரித்தாலும், மறுபுறம் அதிகமானோர் குணமடைவதும் உயிரிழப்பு குறைவாக இருப்பதும் ஆறுதலான விஷயங்கள். இன்று 6 பேர் உயிரிழந்தனர். எனவே உயிரிழப்பு எண்ணிக்கை 160ஆக அதிகரித்துள்ளது.