சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு காரணமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண்பாலகோபாலன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில்;- 

* காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி அருண்பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

*  சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி சிபிசக்ரவத்தி சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

*  சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக உள்ள ஜெயச்சந்திரன் தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

* தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக இருந்த சி.ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.

*  சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த கண்ணம்மாள் சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.

* சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

* அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.