அடேங்கப்பா.. அக்டோபர் மாதத்தில் மட்டும் இத்தனை லட்சம் பேர் மெட்ரோவில் பயணமா?
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
சென்னை மெட்ரோ இரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 85.50 லட்சம் பயணிகள் பயணித்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 117 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,69,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும், மே மாதத்தில் 72,68,007 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82.53,692 பயணிகளும், ஆகஸ்டு மாதத்தில் 85,89,977 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 84,37,182 பயணிகள் மற்றும் அக்டோபர் மாதத்தில் 85.50,030 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 20.10.2023 அன்று 3,60,743 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code)பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34,20,155 பயணிகள் (Online QR 2,07,097; Static QR 96,913; Paper QR 25,52,323; Paytm 3,53,003; Whatsapp - 2,10,819), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 42,16,831 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 2,51,955 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 7,928 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 6,53,161 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட் மற்றும் Paytm App போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை சுத்தமாவும். சுகாதாரமாகவும் பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.