இந்தியாவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது. மகாராஷ்டிராவில் 1380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வரை தமிழ்நாட்டில் 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 

இன்றைக்கு மேலும் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதை தலைமை செயலாளர் சண்முகம் உறுதி செய்தார். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினமும் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பது வழக்கம். 

இந்நிலையில், இன்றைக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர், 77 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களில் அனைவருமே பயண பின்னணி கொண்டிருந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தான். அதனால் சமூக தொற்று இல்லை என்று தலைமை செயலாளர் தெரிவித்தார்.

எனவே தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 911ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.