தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 2,20,716ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறைந்துவரும் 21 மாவட்டங்களில் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

அந்தவகையில், இன்று 63250 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6693 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அதனால் தான் கடந்த சில தினங்களாக அதிகமான பாதிப்பு பதிவாகிறது.

இன்று சென்னையில் 1138 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 95857ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்திற்கும் மேலாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துவருகிறது. கொரோனா தீவிரம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்காகத்தான் குழு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று 5723 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,62,249ஆக அதிகரித்துள்ளது. 

இன்று 77 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3571ஆக அதிகரித்துள்ளது.