Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் இன்று பரிசோதனை, பாதிப்பு, டிஸ்சார்ஜ் மூன்றுமே உச்சபட்சம்.! ஒரேநாளில் 6000ஐ கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. 
 

6472 new corona cases confirmed in tamil nadu on july 23
Author
Chennai, First Published Jul 23, 2020, 6:16 PM IST

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் முனைப்பில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 62,116 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதியனாது. எனவே தமிழ்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்படுவதால் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்படுகின்றன. அதனால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியிருக்கிறது.

6472 new corona cases confirmed in tamil nadu on july 23

இன்று சென்னையில் 1336 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 90900ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரமாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு தாறுமாறாக அதிகரித்துவருவது வருத்தம் அளிக்கிறது. 

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். அந்தவகையில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5210 பேர் டிஸ்சார்ஜ் ஆனதையடுத்து, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793அதிகரித்துள்ளது. 

இன்று 88 பேர் உயிரிழந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை 3232ஆக அதிகரித்துள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios