தமிழகத்தில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதேபோல், திமுக முன்னாள் மேயர் கொலை வழக்கில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியும் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் விவரம்;-

* திருநெல்வேலி காவல் ஆணையராக தீபக் எம்.தாமர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* திருநெல்வேலி ஆணையராக இருந்த பாஸ்கரன் சென்னை மாவட்ட செயலாக்கத்துறை ஐஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை சிபிசிஐடி எஸ்.பி. நிஷா பார்த்திபன், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

* திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கயல்விழி, உளுந்தூர்பேட்டை சிறப்பு காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

* பெரம்பலூர் எஸ்.பி. திஷா மிட்டல், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

* சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏஐஜி ரங்கராஜன், சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி. ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வந்த அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிபிசிஐடி விசாரணை அதிகாரியான டிஎஸ்.பி அனில் குமாருக்கு பதில் பிராங்க்ளின் ரூபன் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.