சென்னை சேலம், திண்டுக்கல் உட்பட 6 மாவட்ட கலெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வேலூருக்கும், வேலூர் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் சேலத்துக்கு, சென்னை இசைப்பல்கலைக்கழக பதிவாளர் சீத்தா லட்சுமி சென்னை கலெக்டராகவும், சேலம் கலெக்டர் ரோகிணி சென்னை இசைப்பல்கலை கழக பதிவாளராகவும் இடம் மாற்றம் செய்ய்பட்டுள்ளனர்.

அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட கலெக்டராகவும்,திண்டுக்கல் கலெக்டர் வினய் அரியலூர் கலெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த ராஜசேகர் மதுரை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர் .

இதுகுறித்த ஆணையை, நேற்று மாலை வெளியிடப்பட்டது.