Asianet News TamilAsianet News Tamil

5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் முடிவின்படி, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

5th,8-th public exam schedule announcements... School Education
Author
Tamil Nadu, First Published Nov 28, 2019, 4:31 PM IST

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொது்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் மத்திய அரசின் முடிவை மசோதாவாகவும் தாக்கல் செய்தனர். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் முடிவின்படி, தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. 

5th,8-th public exam schedule announcements... School Education

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மட்டுமே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகவும், இதுகுறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

5th,8-th public exam schedule announcements... School Education

இந்நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5-ம் வகுப்புக்கான தேர்வு 2020-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு 2020 மார்ச் 30-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும். பின்னர், தேர்வு 10.15 மணிக்கு தொடங்கி 12.15 மணி வரை நடைபெற உள்ளது. 

தேர்வுகள் விவரம்;-

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை: மார்ச் 30 - தமிழ், ஏப்ரல் 2 - ஆங்கிலம், ஏப்ரல் 8 - கணிதம், ஏப்ரல் 15 - அறிவியல், ஏப்ரல் 17 - சமூக அறிவியல்.

5-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஏப்ரல் 15 - தமிழ், ஏப்ரல் 17 - ஆகங்கிலம், ஏப்ரல் 20 - கணிதம் ஆகிய 3 பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios