சென்னையில் இன்று புதிதாக 575 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது. 

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அழையா விருந்தியாளியாக வந்து கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் கொஞ்சம் கூட குறையால் வைரஸ் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 5,882 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னையில் உயிரிழப்பு அதிகரித்து காணப்படுகிறது. 

இந்த சூழலில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று பாதிக்கப்பட்டவர் எடுத்து கொண்டால் 10 வயதுக்குட்பட்ட 29 பேருக்கும்,  80 வயதுக்கு மேற்பட்ட 11 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 67 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் பிறந்து 4 நாட்களே ஆனா குழந்தைக்கும் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையயடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000ஐ நெருங்கியுள்ளது. 

சென்னையில் தொடர்ந்து 3வது நாளாக 500க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வையடுத்து சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.