தமிழ்நாட்டில் இன்று மேலும் 4328 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கும் நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 5000 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் தினமும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டில் இன்று 41382 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், மேலும் 4496 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 1,51,820ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 1291 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துவிட்டது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வந்துள்ளது. இன்று சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 3205 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்து வருவது. நற்செய்தியாக உள்ளது. இன்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5000 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியிருப்பதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310ஆக அதிகரித்துள்ளது. 47340 பேர் மட்டுமே சிகிச்சை பெற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை லட்சம் பேரில், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்திருப்பதும், பாதிப்பு எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்காததும், தமிழ்நாட்டிற்கு நம்பிக்கையளிக்கிறது.

இன்று 68 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு என்ணிக்கை 2167ஆக அதிகரித்துள்ளது.