தமிழ்நாட்டில் இன்று மேலும் 4979 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,70,693ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று அதிகபட்சமாக 51,640 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 4979 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,70,693ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக கட்டுக்குள் வந்த நிலையில், இன்றும் பாதிப்பு கட்டுக்குள்ளேயே உள்ளது. இன்று 1254  பேருக்கு தொற்று உறுதியானதால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 85859ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு ஒருபுறம் அதிகரிக்கும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்தும் வருகின்றனர். இன்று 4059 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,915ஆக அதிகரித்துள்ளது. 50294 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

இன்று 78 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 2481ஆக அதிகரித்துள்ளது.