இந்தியாவில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், 43 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில், 43 லட்சம் வழக்குகள், ஆண்டு கணக்கில் நிலுவையில் உள்ளன. இதில், 8 லட்சம் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. வழக்குகளை உடனுக்குடன் முடிக்க போதிய நீதிபதிகள் இல்லை என பரவலாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் சிறிய நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இதனை விசாரித்து முடித்து வைக்க போதிய அக்கறை காட்டவில்லை என சில வழக்கறிஞர்கள் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக ஒரே வழக்கை இழுத்து சென்று, கடைசியில் அதை டிஸ்மிஸ் செய்யும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர் என சட்டத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், ராஜ்யசபாவில் கூறுகையில்,  நிலுவையில் உள்ள 43 லட்சம் வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்வதாகவும், காலி இடங்களை நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.