தமிழ்நாட்டில் இன்று மேலும் 4150 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 34,831 பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 4150 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,151ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று தொடர்ச்சியாக நான்காவது நாளாக, ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கடந்த 2ம் தேதி தான் தமிழ்நாட்டில் முதல் முறையாக 4 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவானது. 2ம் தேதி அதிகபட்சமாக 4343 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இன்றுவரை தொடர்ந்து நான்கு நாட்களாக 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1713 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 68254ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது மட்டுமே ஒரே ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2186 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 62778ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 60 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1510 ஆக அதிகரித்துள்ளது.