டெங்கு கொசு ஓழிக்க வேண்டி சிறுவர்கள் பேரூராட்சி ஊழியர்களிடம் மனு அளித்ததுள்ள சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 750க்கும் மேற்ப்பட்டோர் வசித்துவருகின்றனர். இங்கு பரவலாக கொசு தொல்லை இருப்பதாக பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு புகார் அளித்தும் பயன்யில்லை.   

இதைக்கண்ட எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள்  சூர்யா, பிரதீப், ஷாஜகான், விஷ்வா என்ற நான்கு பேரும் சேர்ந்து எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள 300 வீடுகளிலும் வீடு வீடாக சென்று மனு ஒன்றை எழுதி அதில் கையொப்பம் இட செய்தனர். கையொப்பமிட்ட நகல்களை எடுத்துக்கொண்டு தேர்வுநிலை பேரூராட்சி சென்ற சிறுவர்கள்  பேரூராட்சி ஊழியர்களிடம் அம்மனுவை அளித்தனர், அம்
மனுவில் கூறியிருப்பதாவது, 

 எங்களது நண்பன் தர்ஷன் வித்ய விகாஸ் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் டெங்குவால் இறந்துவிட்டான், அது  இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி அது போன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கக்கூடாது, அதற்கான நடவடிக்கைகளை தயவு கூர்ந்து மேற்கொள்ளுங்கள்...  என்று அதில் வலியுறுத்தியுள்ளனர்.  

புகார் கொடுத்த சிறுவர்கள் நான்குபேரும் உயிரிழந்த தர்ஷனின் நண்பர்கள் ஆவர்,  இது குறித்து தெரிவித்துள்ள அவர்கள், மேலும் இதுபோன்று  யாரும் இறக்கக் கூடாது என்று தெரிவித்தனர். அத்துடன் இனி எம்ஜிஆர் நகர் பகுதியில் கொசு தொல்லைகள் இருக்கக்கூடாது  என்ற எண்ணத்தில் இந்த மனுவை அளித்ததாக கூறினர். இந்நிலையில் கொசு மருந்து அடிக்க வந்தவரும் பெயரளவுக்கு மட்டும் அடித்து விட்டு சென்றதாலும் சிறுவர்கள் அழைத்தும் பெரும்பாலான இடங்களுக்கு மருந்து தெளிக்காமல் ஊழியர் செல்லும் வீடியோவையும் பேருராட்சி அதிகாரியிடம் அவர்கள் கொடுத்தனர். சிறுவர்களின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் வெகுவாகி பாரட்டி வருகின்றனர்.