கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே விசிக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரணடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை பகுதியை சேர்ந்தவர் புஷ்கரன். இளம்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய துணைச்செயலாளர். கடந்த 5ம்தேதி புஷ்பகரனை, அதே பகுதியில் மர்மநபர்கள் சிலர் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கிஷோர், மாதேஷ் கண்ணா, சஞ்சய்குமார், சஜன் ஆல்பர்ட் ஆகியோர் நேற்று போலீசில் சரணடைந்தனர்.

விசாரணையில், புஷ்பாகரனின் உறவுக்கார பெண்ணை கிஷோர் ஒருதலையாக காதலித்து வந்தார். இதையறிந்த, புஷ்பாகரன் மற்றும் அப்பெண்ணின் அண்ணன் தாமஸ் ஆகியோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கிஷோரை கைத செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிஷோர், புஷ்பகரனை பழிவாங்க முடிவு செய்தார். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு தனியாக வந்த புஷ்பாகரனை, தனது நண்பர்களுடன்  சேர்ந்து வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், தலைமறைவாக இருக்கும் கிஷோரின் அண்ணன் பிரசன்னாவை தனிப்படை ஆமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்