ஆந்திர மாநிலம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர் யஷ்வந்த் சிங். இவரது மனைவி அனுசெல்வி(27). இந்த தம்பதியினருக்கு ரியான்செரி என்கிற 1 வயது மகன் இருக்கிறான். யஷ்வந்த் சிங்கின் பெற்றோர் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இன்று அதிகாலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பினர். அவர்களை வழியனுப்புவதற்காக யஸ்வந்த் சிங்கின் குடும்பத்தினருடன் அவரது சகோதரி விஜயலட்சுமி (39), அவரது மகள்கள் நமிதா (14), ரித்திவிகா (12) ஆகியோரும் சென்றனர்.

ஒரு காரில் அனைவரும் விமான நிலையத்திற்கு சென்று பெற்றோரை வழியனுப்பி விட்டு மீண்டும் ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பனங்காடு அருகே இருக்கும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போதே அதே சாலையில் காருக்கு முன்னால் பால் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்றது. திடீரென சாலையோரம் ஓரமாக லாரியை நிறுத்துவதற்காக ஓட்டுநர் திருப்பியுள்ளார். அதை எதிர்பார்க்காத யஸ்வந்த் சிங் வந்த குடும்பத்தினர் கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கி உள்ளே இருந்த அனுசெல்வி, அவரது மகன் ரியான்செரி, விஜயலட்சமி, நமிதா ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். பலத்த காயத்துடன் யஷ்வந்த், ரித்விகா ஆகியோர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். தகவலறிந்து வந்த காவலர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

196 நிமிடங்கள்..! அனல் பறக்கும் திட்டங்களுடன் அதிரடி காட்டிய அதிமுக..! அதிர்ந்து போன திமுக..!