இன்னும் 24 மணிநேரத்தில், தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டத்தில் இடியுடன் கூட மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெய்யிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்ட நிலையில், தற்போது மழை பெய்யும் என மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில், காற்றின் வேகம், திசை மாறியதன் காரணமாக இன்னும் 24 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர வாமட்டங்களான புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை, மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

அதே போல் சென்னையை பொறுத்தவரை, மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.