Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் தொடரும் சோகம்: பரிசோதனை குறைவு; பாதிப்பு உச்சபட்சம்..! இன்று இரேநாளில் 3940 பேருக்கு தொற்று

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82275ஆக அதிகரித்துள்ளது. 
 

3940 new corona cases confirmed in tamil nadu on june 28
Author
Chennai, First Published Jun 28, 2020, 6:26 PM IST

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 3940 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82275ஆக அதிகரித்துள்ளது. 
     
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி, தமிழக அரசு கொரோனா பரிசோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

நேற்று 34805 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இன்று 31 ஆயிரம் என்கிற அளவில் தான் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை இன்று குறைந்தாலும், பாதிப்பு உச்சபட்சமாக பதிவாகியிருக்கிறது. இன்று ஒரே நாளில் அதிகபாட்சமாக 3940 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82275ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. 

3940 new corona cases confirmed in tamil nadu on june 28

சென்னையில் இன்று ஒரே நாளில் 1992பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 53762ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் அதேவேளையில், அதிகமானோர் குணமடைந்துவருவது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1443 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 45537ஆக அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் இன்று 54 பேர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 1079ஆக அதிகரித்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios