சென்னையில் அதிர்ச்சி.. யுகேஜி சிறுவனை அடித்த புகாரில் 3 ஆசிரியைகள் அதிரடி கைது..!
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது 6 வயது மகன் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். எல்கேஜி வகுப்புகளை கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்துவிட்டு யுகேஜி வகுப்புக்கு நேரில் சென்று சிறுவன் வந்துள்ளார்.
சென்னையில் சரியாக எழுதாத யுகேஜி சிறுவனை அடித்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுகேஜி மாணவன்
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி டெய்சி ராணி. இவர்களது 6 வயது மகன் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் யுகேஜி படித்து வருகிறான். எல்கேஜி வகுப்புகளை கொரோனா காரணமாக ஆன்லைனில் படித்துவிட்டு யுகேஜி வகுப்புக்கு நேரில் சென்று சிறுவன் வந்துள்ளார். அப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை சரியாக உச்சரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், பிரின்சி, இண்டியனாவான், மோனோஃபெரர் ஆகிய 3 ஆசிரியர்கள் கடுமையாக திட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதி
இதனையடுத்து மாணவனுக்கு வலிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து பயத்தில் மாணவன் அழுகையை நிறுத்தாததால் பெற்றோர்கள் சிறுவனுக்கு ஆறுதல் கூறினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இதுகுறித்து பெற்றோர் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டதற்கு ஆசிரியைகளே காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டினர்.
3 ஆசிரியைகள் கைது
சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் 3 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- என் புருஷன் மட்டையாயிட்டா சீக்கிரம் வாடா.. இறுதியில் கள்ளக்காதலனும், மனைவியும் என்ன செய்தாங்க தெரியுமா?